ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: கரடிகளைப் பிடிக்க தனிக்குழு

ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் செய்தி எதிரொலியால் கோத்தகிரியில் தேயிலைத் தோட்டத்தில் உள்ள கரடிகளைப் பிடிக்க வனச்சரகர் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரடிகளை பிடிக்க தனிக் குழு
கரடிகளை பிடிக்க தனிக் குழு
author img

By

Published : Jan 27, 2022, 10:03 PM IST

நீலகிரி: அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவைகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.

கோத்தகிரி அருகே ஆடந்தொரை பகுதியில் தேயிலைத் தோட்டத்தின் நடுவே கரடி ஒன்று குழி தோண்டி அதில் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

கரடிகளைப் பிடிக்க தனிக் குழு

இதன் காரணமாக தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவ்வழியாக நடந்து செல்ல அச்சமடைகின்றனர் என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

இச்செய்தியின் எதிரொலியாக, கட்டப்பெட்டு என்னும் வனச்சரகத்திற்குட்பட்ட வனச்சரகர் செல்வக்குமார் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டு, தாய் கரடியையும், இரண்டு குட்டிகளையும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் 4 நாள்களாக போக்குக் காட்டிய சிறுத்தை பிடிபட்டது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.