உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலை வெளிப்படுத்தும் விதமாக கருதப்படும் சிகப்பு ரோஜா மலருக்கு மவுசு அதிகம் என்பதால், அதன் விலையும் சற்று தூக்கலாகவே இருக்கும்.
இதையடுத்து இந்த ஆண்டு ஒரு ரோஜா மலர் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, நீலகிரியில் விளையும் லில்லியம், ஜெர்பரா, கார்னேஷன் கொய்மலர்களுக்கு தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வில்லியம், கொய்மலர்கள் 10 பூக்கள் அடங்கிய ஒரு கொத்து ரூ. 220 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரியில் உற்பத்தியாகும் இவ்வகை மலர்கள் திருமணம், பண்டிகை காலங்களில் பயன்பட்டு வந்தன. இவ்வகை பூக்கள் தற்போது பல்வேறு வகையான பூங்கொத்துகள் கொடுப்பதற்கு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூரிலும் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
இவ்வகை மலர்களை சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டுசென்று, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பணிகள் நடைபெற்றுவருகிறது. காதலர் தினத்தையொட்டி மலர்களின் விலை உயர்ந்துள்ளது, சற்று ஆறுதலாக உள்ளதாக சாகுபடியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து சாதனை - பச்சை ஆடை அணிந்து மரம்போல் நின்ற மாணவர்கள்