நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஹெத்தையம்மன் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜனவரி மாதம் நடைபெறக்கூடிய ஹெத்தையம்மன் பண்டிகையின் ஒரு பகுதியாக பக்தர்கள் ஒரு மாத காலம் விரதமிருந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊர்வலம் செல்கின்றனர்.
ஊர்வலத்தில் ஹெத்தையம்மன் குடை மற்றும் ஹெத்தையம்மன் கோலுடன் பாரம்பரிய உடையணிந்து ஊர்வலம் செல்கின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு கிராமங்களிலும் மலர்கள் தூவி சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. ஹெத்ததையம்மன் பண்டிகையின் முக்கிய திருவிழா ஜனவரி 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது.
இதில் பிரசித்தி பெற்ற பேரகணி ஹெத்தையம்மன் திருவிழா வருகின்ற 8ஆம் தேதி நடைபெறவுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!