நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியது. இதனால் இப்பகுதியில் செடி கொடிகள் காய்ந்து காணப்பட்டன. அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டு காடுகள் எரிவது வாடிக்கையாக இருந்துவந்தது.
மேலும் காடுகளில் உள்ள வன விலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரத்தொடங்கியது. தற்போது குன்னூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குன்னூர் பகுதியில் உள்ள பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.