ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அனைவரும் வாழ்த்து தெரிவிக்க அழைப்பும் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நீலகிரி ஹாக்கி அமைப்பு சார்பில் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை முன்பு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டது.
செல்பி ஸ்பாட்:
ஹாக்கி அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன், பொருளாளர் ராஜா, கணேசமூர்த்தி, திமோத்தி உள்பட பலரும் சேர்ந்து இந்த ஏற்பாடுகளை செய்தனர். இதனை வெடி மருந்து தொழிற்சாலை துணை பொது மேலாளர் டேனியல் இந்த செல்பி ஸ்பாட்டை தொடங்கிவைத்தார்.
இந்த இடத்தில் நின்று தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் செல்பி எடுத்து, தங்களது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி