குன்னூர் பகுதிகளில், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (டபிள்யு. டபிள்யு.எப்.,) அமைப்புடன் வனத்துறை இணைந்து யானைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு, கேரள பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் புகுந்து விடுவதால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் யானைகள் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கோவை மண்டல கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தபோலா மேற்பார்வையில், குன்னூர் வனசரகர் தலைமையில் வனத்துறையினர் குன்னூர் - மேட்டுப்பாளைய சாலையோர வன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் யானைகள் நடமாட்டம், மக்கள் வாழ்விடங்களில் வரும் வழித்தடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.