ETV Bharat / state

மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்கு: விழிப்புணர்வில் வனத்துறை - மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்கு

நீலகிரி: மின்வேலியில் சிக்கி காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி பலியாவதை தடுக்க வனத்துறையினர் முதல் முறையாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

wildlife
wildlife
author img

By

Published : Jan 23, 2021, 2:40 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை, அதனை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சமீப காலமாக இப்பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் வன விலங்குகள் அதிக அளவில் வருகின்றன. காட்டு யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதபடுத்துவதால் சில விவசாயிகள் தங்களது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து அதில் மின்சாரத்தை நேரடியாக பாய்ச்சுகின்றனர்.

அதில் சிக்கி வன விலங்குகள் பலியாவது தொடர்கிறது. குறிப்பாக கடந்த அக்டோபரில் சின்ன குன்னூர் பகுதியில் காட்டு யானை ஒன்றும் உதகை நகரில் காட்டெருமை ஒன்றும் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தன. இதனையடுத்து மின்வேலியில் சிக்கி வன விலங்குகள் இறப்பதை தடுக்கும் விதமாக வனத்துறையினர் விவசாயிகள், கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

விழிப்புணர்வில் வனத்துறை

அதற்காக உதகை வடக்கு வனச்சரக வனத்துறையினர் சுமார் 5 ஆயிரம் துண்டு பிரசுரங்களை அச்சடித்து கிராமம், கிராமமாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர். அந்த துண்டு பிரசுரங்களில் மின்வேலி அமைப்பதால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதற்கான தண்டனைகள் குறித்தும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விரிவாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் கோடை காலம் விரைவில் தொடங்கவுள்ளதால் காட்டு தீ ஏற்படுத்த கூடாது மீறுபவர்கள் மீது எடுக்கபடும் நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடபட்டுள்ளது. வனத்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கிராம மக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்வது மட்டுமின்றி வனக்குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்தும் எடுத்துரைத்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.