ETV Bharat / state

’வங்கிக் கடனை ரத்து செய்து, நிவாரணம் வழங்குக’ - உதகை கொய்மலர் விவசாயிகள் - Relief for flower growers

ஊரடங்கு காரணமாக மலர்கள் சாகுபடியில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்து மானியம் வழங்க வேண்டும் என கொய் மலர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளரிடம் பேசிய கொய்மலர் விவசாயி.
கொய்மலர் விவசாயிகள்
author img

By

Published : Jun 20, 2021, 10:17 AM IST

Updated : Jun 20, 2021, 2:54 PM IST

நீலகிரி: மாவட்டத்தில் சுமார் 60 விழுக்காடு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பல விவசாயிகள் மாற்றுப் பயிராக, கொய்மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களுக்கு வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கூக்கல் தொரை, தும்மனட்டி, துனேரி, கோத்தகிரி, கொடநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். கார்னேசன், ஜெர்பரா, லில்லியம் போன்ற கொய்மலர்கள் பசுமை குடில்கள் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பூக்கும் கொய்மலர்கள் அறுவடை செய்யப்பட்டு சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

செய்தியாளரிடம் பேசிய கொய்மலர் விவசாயி.

இதில் சில விவசாயிகள் கார்னீசியன், ஐட்ரோஜெனியா, ஜெர்புரா போன்ற கொய்மலர்களையும் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, பிங்க், மஞ்சள் என பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த மலர்கள், திருமண மேடை அலங்காரம், பூங்கொத்துகள் தயாரித்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கொய்மலர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்து, திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் மலர் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே இரண்டு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. ஏற்கனவே அந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வர முடியாத சூழ்நிலையில், வங்கிக்கடன் பெற்று இந்த ஆண்டு விவசாயிகள் மலர் சாகுபடி செய்தனர். விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு அனுப்ப முடியாததால், நீலகிரி கொய்மலர் விவசாயிகளுக்கு இரண்டு முதல் ஐந்து கோடி வரை நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் மலர்கள் ஏற்றுமதி செய்யபட்ட நிலையில் தற்போது அது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட கொய்மலர் விவசாயிகளின், வங்கிக்கடனை ரத்து செய்து, நிவாரண நிதி வழங்க வேண்டும் என கொய்மலர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : கரோனா தாக்கம்: வருமானமின்றி தவிக்கும் சிம்ஸ் பூங்கா வியாபாரிகள்

Last Updated : Jun 20, 2021, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.