நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள எழுமுரம் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம் (50). இவர் அருகில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்துவருகிறார். இன்று காலை வழக்கம்போல் மாணிக்கம் பணிக்கு செல்லும்போது எதிரே வந்த காட்டுயானை அவரை தந்தத்தால் குத்தி வீசியது.
இதனையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் மாணிக்கத்தை மீட்டு கூடலூர் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். யானை பலமாகத் தாக்கியதையடுத்து குடல் வெளியே வந்து ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மாணிக்கம் கேரளாவுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மாணிக்கத்தை குத்திய யானை, காயங்களுடன் காணப்பட்டதாகவும் அப்பகுதியில் தொடர்ந்து நடமாடிவருவதாகவும் கூறினர். இதுவரை இரண்டு பேரைத் தாக்கிய யானை பல வீடுகளை உடைத்து சேதம் செய்துள்ளது.
இது குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளித்து அதனை மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... 100 அடி உயரத்திலிருந்து விழுந்து ஒருவர் தற்கொலை