நீலகிரி: குன்னூரில் சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் குன்னூர் அருகே 'கிளண்டெல்' தேயிலை தோட்டம் குடியிருப்பு பகுதியில் உள்ள கோயில் வளாகத்தில் 2 குட்டிகளுடன் கூடிய 9 யானைகள் முகாமிட்டுள்ளன. இதனைக் கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இவை எந்த நேரமும் மனிதர்களைத் தாக்க வாய்ப்புள்ளது, எனவே வனத்துறையினர் காட்டுயானைகள் அங்கிருந்து விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். யானைகளை வனத்துறையினர் விரட்டி விட்டாலும், வனத்துறைக்குப் போக்கு காட்டி அப்பகுதியில் மீண்டும் வலம் வருகின்றன.
இனி யானைகள் தாங்களாகவே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றால் தான் முடிவுக்கு வரும் என்ற நிலைமையாகி விட்டது. இதனால் குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் யானைகளின் நட மாட்டத்தை வன ஊழியர்கள் கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கியதில் 8 பேருக்கு காயம்