ETV Bharat / state

பயிர்களை சேதம் செய்யும் யானைகள்: விவசாயிகள் கவலை! - முதுமலை வனப்பகுதி

நீலகிரி: முதுமலை வனப்பகுதிக்குள் இருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

elephant
author img

By

Published : Jul 1, 2019, 2:27 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள வடவயல் கிராமம் முதுமலை புலிகள் காப்பாக எல்லையில் உள்ளது. முழுவதுமாக விவசாயம் சார்ந்துள்ள இந்த கிராமத்தில் வாழை, தென்னை, பாக்கு, தேயிலை, காப்பி உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீப காலமாக முதுமலை வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வடவயல் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பொருட்களை சாப்பிட்டு நாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பயிர்களை சேதம் செய்யும் யானைகள்: விவசாயிகள் கவலை!

காட்டு யானைகள் ஊருக்குள் வரும்போது வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டால் அவர்கள் வந்து விரட்டுவது இல்லை என அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் முதுமலை வனப்பகுதியை ஒட்டி வெட்டப்பட்டுள்ள அகழி முறையாக பராமரிக்கபடாத காரணத்தால், அதன் வழியாக காட்டு யானைகள் ஊருக்குள் வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விவசாய பகுதிக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 01-07-19
முதுமலை வனப்பகுதிக்குள் இருந்து கிராமத்திற்குள் புகும் காட்டும் யானைகள் தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளார். வனத்துறையினர் மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் புகார்
கூடலூர் அருகேயுள்ள வடவயல் கிராமம் முதுமலை புலிகள் காப்பாக எல்லையில் உள்ளது. முழுவதுமாக விவசாய சார்ந்துள்ள இந்த கிராமத்தில் வாழை, தென்னை, பாக்கு, தேயிலை, காப்பி உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறும் காட்டு யானை கூட்டம் வடவயல் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை. தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பொருட்களை தின்று நாசம் செய்துள்ளது. இதனை அப்பகுதி விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. காட்டு யானைகள் ஊருக்குள் வரும் போது வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டால் அவர்கள் வந்து விரட்டுவது இல்லை என அந்த கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் முதுமலை வனப்பகுதியை ஒட்டி வெட்டப்பட்டுள்ள அகழி முறையாக பராமரிக்கபடாத காரணத்தால் அதன் வழியாக காட்டு யானைகள் ஊருக்குள் வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விவசாய பகுதிக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.