நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில், காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. இவை தண்ணீர், உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்கும், தேயிலை எஸ்டேட்களிலும் உலா வருகின்றன.
இந்நிலையில், வெலிங்டன் ராணுவப் பகுதியில் கடந்த 5 நாள்களாக காட்டெருமை ஒன்று வாய்கிழிந்த நிலையில் சுற்றிவருகிறது. அந்த காட்டெருமை உணவு உண்ண முடியாமலும் தண்ணீர் குடிக்க முடியாமலும் தவித்துவருகிறது. இதற்குச் சிகிச்சை அளிக்க ஈடிவி பாரத்தில் இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வனத் துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து வெலிங்டன் பகுதிகளில் காட்டெருமையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் காட்டெருமையை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க உள்ளோம் என்று குன்னூர் வனச்சரகர் சசிகுமார் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காட்டெருமை தாக்கியத்தில் ஒருவர் உயிரிழப்பு