நீலகிரி: குடிபோதையில் சிக்கிய முன்னாள் எம்பி சி. கோபாலகிருஷ்ணன் வகித்துவந்த மாவட்ட அவைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட அதிமுக அவைத்தலைவராகப் பதவி வகித்துவந்தார் டாக்டர் சி. கோபாலகிருஷ்ணன். முன்னாள் எம்பியான இவர், குடிபோதையில் ஆடையின்றி பக்கத்து வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததாகக் காணொலி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து குன்னூர் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை அடுத்து, இவர் மீது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில், அவைத்தலைவர் பதவியிலிருந்து இவர் விடுவிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நுழைந்தாரா முன்னாள் எம்பி?