குன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான பேரட்டி, பந்துமை, கம்பிசோலை, பாரதி நகர் ஆகிய பகுதிகளுக்கு, கோத்தகிரி - குன்னூர் சாலையோரத்தில்,குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளம் தோண்டினர். அப்போது நிலத்தடியின் கீழ் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
இது குறித்து பேரூராட்சிக்கு நிர்வாகத்திற்கு, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தகவலளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் குன்னூர் பகுதியில், ஒரு குடம் குடிநீர் ரூபாய் 10-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுபோன்று மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் குடிநீர் வீணாவதை தடுக்க, குழாய் உடைப்பை உடனே சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.