ETV Bharat / state

முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்: ஆ. ராசா - dmk leader a raja apologise to cm palanisamy

நீலகிரி: முதலமைச்சர் பழனிசாமியை அவதூறாக பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா
author img

By

Published : Mar 29, 2021, 1:30 PM IST

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா இன்று (மார்ச் 29) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ’இரண்டு நாள்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து நான் பேசியது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பபட்டு வருகிறது. அதற்கு விளக்கமளித்தேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் வணக்கத்திற்குரியவர். அவரது அரசியல் ஆளுமையையும், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி தேர்தல் பரப்புரையில் பேசினேன். அதில் சில வரிகளை மட்டும் எடுத்து, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிப்பதையும் விளக்கினேன்.

அது குறித்து விவாதம் தொடர்ந்ததால் நேற்று கூடலூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி, அவரது அன்னையார் ஆகிய இருவரின் புகழுக்கும் களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை; இரு தலைவர்கள் குறித்த அரசியல் ஆளுமை பற்றியே நான் பேசினேன் என்றும் நானும், ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கம் அளித்தேன்.

முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தி நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இடப்பொறுத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்திலிருந்து எனது வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலேபோய் முதலமைச்சர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளப்படியே காயப்பட்டதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்து கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை.

முதலமைச்சருக்கும், அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது, எனது பேச்சு இரண்டு தலைவர்களை பற்றிய தனி மனித விமர்சனம் இல்லை. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமை குறித்த மதிப்பீடும் மற்றும் ஒப்பீடும் தான். முதலமைச்சர் காயப்பட்டு கலங்கியதற்காக எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவிக்கும் அதே வேலையில் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.

என் மீது தொடுக்கப்பட்ட 2-ஜி வழக்கை விசாரித்த நீதிபதி சைனி.., தனது தீர்ப்பின் கடைசி பக்கத்தில் இந்த வழக்கு எப்படி புனையப்பட்டது என்பதனை நான்கு ஆங்கில வார்த்தைகளால் முடித்தார் Misreading, Selective reading, Non-reading and Out of Context reading of files என்று குறிப்பிட்டார். கோப்புகளை தவறாக படித்ததாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில கோப்புகளை படித்ததாலும், சில கோப்புகளை படிக்காமல் விட்டதாலும், சில கோப்புகளை இடப்பொருத்தமற்று படித்ததாலும், ஏற்பட்டதே இந்த வழக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட எனது 40 நிமிட உரையை முழுமையாக நீங்கள் கேட்டால், இதே தீர்ப்பை நீங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறேன்’ என்றார்.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய காரணத்திற்காக ஆ.ராசா மீது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், ஆபாசமாகப் பேசுதல், கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: அரசியல் ஆசையை வெளிப்படுத்திய வைகோ மகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.