ETV Bharat / state

குன்னூரில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் - தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Dec 7, 2020, 8:48 PM IST

நீலகிரி: குன்னூரில் உள்ள தன்னார்வ குழுவினர் சார்பில் ஓர் ஆண்டிற்கான ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்..

ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம்
Nutritious food for the tribes

நீலகிரி மாவட்டம் குன்னூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குறும்பர், இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கோழிக்கறி, சின்ன குறும்பாடி, பெரிய குறும்பாடி, புதுக்காடு உள்ளிட்ட நான்கு கிராமங்களில் குறும்பர் இன ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர்.

பாரம்பரிய உணவு வகைகளை உட்கொண்டு வந்த இந்தப் பகுதி மக்கள் ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் குன்னூரில் உள்ள தன்னார்வ குழுவினர் சார்பில் ஓர் ஆண்டிற்கான ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம்

அப்போது, குத்து விளக்கேற்ற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்தபோது, அங்குள்ள பழங்குடியின மாணவியை அழைத்து குத்துவிளக்கு ஏற்ற வைத்த மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. தொடர்ந்து ஊட்டச்சத்து உணவுகளை தயாரிப்பதற்கான சமூக பூங்கா திட்டத்தில் விதைகள் விதைத்து மாவட்ட ஆட்சியர் நடவு பணியை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: எங்களின் நிலத்தை அழித்து எரிவாயுக்குழாயா? - ஐஓசிக்கு எதிராக கொந்தளிக்கும் கிராமத்தினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.