நீலகிரி மாவட்ட நுழைவுவாயிலான பர்லியார் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கும் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டுவருகின்றன.
மேலும் பழங்குடி கிராமங்களான குரும்பாடி, சின்ன குரும்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் துண்டுப்பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன. மேலும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் பர்லியார் ஊராட்சி மன்றத் தலைவர் சுசீலா, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தீனதயாளன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் துரைசாமி, மாவட்ட வளர்ச்சி அலுவலர் நிர்மலா ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
இதையும் படிங்க... கரோனா வைரஸ்: புதுமையான முறையில் விழிப்புணர்வு