ETV Bharat / state

குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு கருப்புக் கொடி - கருப்புக் கொடி

நீலகிரி: கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்க வந்த குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

coonoor contolment
Coonoor Vice President shows Black flag for MLA
author img

By

Published : May 28, 2020, 9:12 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த பாரதியார், கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்விற்கு மாவட்ட செயலாளருக்கு மட்டும் அழைப்புவிடுத்து, குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமுவுக்கு அழைப்பு விடுக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று கன்டோன்மென்ட் பகுதியில் வாரிய துணை தலைவர் பாரதியார், கரோனா நிவாரணப் பொருட்களை கொடுக்க வந்துள்ளார். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதிக்கு வரும்போது துணை தலைவர் பாரதியார் அணியினர், கருப்பு உடை அணிந்தும் கருப்புக் கொடிகள் காண்பித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்தனர். இதனால் சட்டப்பேரவை உறுப்பினரின் காரை நிறுத்தி கீழே இறங்கி நடந்து சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பேரூர் கழக பொருளாளர் கட்சியிலிருந்து நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.