நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 160-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன. ஜூன் 1ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படும் நடப்பு ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் குன்னூரில் உள்ள ஆதிவாசி, கிராமப்புற பள்ளிகளுக்கு, அதிலும் குறிப்பாக பர்லியார் புதுக்காடு காந்திபுரம் சேலஸ் உள்ளிட்ட பள்ளிகளுக்கு கிடைக்காமல் மாணவ மாணவியர் தவித்துவருகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பள்ளிகளுக்கு உடனடியாக பாடப் புத்தகங்களை வழங்கி மாணவர்களுக்கு முறையான கல்வியை பயிற்றுவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.