நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த சில மாதங்களாக குடியிருப்பு பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் வாடிக்கையாக உள்ளது. தற்போது ஓட்டுப்பட்டரை, அருவங்காடு, வெலிங்டன் ஆகிய பகுதிகளில் காட்டெருமை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி உள்ளிட்டவைகள் குடியிருப்புக்குள் புகுந்து தஞ்சம் அடைகின்றன.
இவற்றை வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினாலும், அவைகள் உணவு மற்றும் குடிநீருக்காக மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. இதேபோன்று ஓட்டுப்பட்டரை பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் முள்ளம்பன்றி புகுந்ததால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த முள்ளம்பன்றியை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுபோல் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: கரோனா பரவலைத் தடுக்க வேப்பிலை தோரணம் கட்டிய கிராம மக்கள்!