நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர் பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சில சமயங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை காட்டெருமைக் கூட்டம், சிம்ஸ் பூங்கா பகுதியில் நடமாடி கொண்டிருந்தது. அப்போது, திடீர் என்று இரண்டு காட்டெருமைகள் சாலையில் சண்டையில் ஈடுபட்டு பயங்கரமாக மோதிக் கொண்டன.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காட்டெருமைகளின் சண்டைக் காட்சியை பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்போனில் படம் பிடித்தனர். மேலும், இப்பகுதியில் வரும் காட்டெருமைகளை வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என பொது மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:
40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும்