ETV Bharat / state

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை - etvbharat

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. பயிர்களை அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் விவசாயிகள் வேதனை

author img

By

Published : Jul 19, 2021, 12:23 PM IST

நீலகிரி: உதகை, குந்தா சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக மழை விட்டு விட்டு பெய்துவந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் (ஜூலை 17) தொடர்மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நடுவட்டம் பகுதியில் 7 செ.மீ மழையும், கிளண்மார்ன் பகுதியில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தோட்டங்களில் நீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

பயிர்கள் சேதம்

மழை தொடர்ந்து பெய்துவருவதால் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழையால் உருளைக் கிழங்கு, பூண்டு செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி சுதேவன் கூறுகையில், "ஒருவார காலமாக தொடர்மழை பெய்துவருவதால் கேரட், பீன்ஸ் அழுகி சேதம் அடைந்தது"என தெரிவித்தார்.

கனமழை

விவசாயி கார்த்தி கூறும்போது, "இங்கு மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இரவு நேரங்களில் அதிக பொழிகிறது. தோட்டத்திற்கும் செல்ல முடியவில்லை. வீட்டை விட்டு யாரும் வெளியே வரவும் முடியவில்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மூங்கிலில் அழகிய ஆபரணங்கள்: கல்லூரி மாணவிகளின் முயற்சி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.