நீலகிாி மாவட்டம் குன்னுாா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடப்பள்ளி கிராமத்தில் கரோனா தொற்று தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் கண்காணிப்பு அலுவலா் சுப்ரியா சாஹீ தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஒலிப்பெருக்கி முலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்ததல், முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகழுவுவது, சானிடைசர் உபயோகிப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊருக்குள் யார் புதியதாக உள்ளே வருகிறாா்கள், வெளியே செல்கிறார்கள் என வருகை பதிவேடு பராமரிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் - வள்ளியப்பா கோரிக்கை