ETV Bharat / state

அங்கன்வாடிக்கு செல்ல ஆர்வம் காட்டும் குழந்தைகள்

நீலகிரி: பழங்குடியின குழந்தைகள் கல்வி கற்கும் வகையில் அங்கன்வாடி அமைத்து தர பழங்குடியின மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அங்கன்வாடிக்கு செல்ல ஆர்வம் காட்டும் குழந்தைகள்
author img

By

Published : Jun 23, 2019, 3:13 PM IST

நீலகிரியில் பல நூறு ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடுத்திவருகின்றன. ஆனால் நீலகிரி மாவடத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களுக்கு பெரும்பாலான திட்டங்கள் சென்றடைவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி, முதுமலை யானை முகாம் அருகில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள மாணவர்களுக்காக கார்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால், அங்கன்வாடி கட்டிக்கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை கட்டித்தரவில்லை என கூறப்படுகிறது.

அப்பகுதி, குரும்பபடியில் தற்போது பெயரளவில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டுவருகிறது. குரும்பபடி அருகில் உள்ள கார்குடி, மேல்பாடி, கீழ்பாடி பழங்குடியின கிராமத்தில் உள்ள குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப ஆர்வம் காட்டினாலும், குரும்பபாடியில் உள்ள குழந்தைகளுக்கே இடம் போதவில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பமுடியாமல் பெற்றோர்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

அங்கன்வாடிக்கு செல்ல ஆர்வம் காட்டும் குழந்தைகள்

தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தினாலும், பழங்குடியின மக்களின் கல்விக்காக அங்கன்வாடியை கட்டிகொடுத்தால் தங்கள் குழந்தைகளின் கல்வித் தரம் மேம்படுவதோடு, வாழ்க்கைத் தரமும் உயரும் என்பதே பழங்குடியின மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Intro:OotyBody:

உதகை PACKAGE 23-06-19
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அங்கன்வாடிக்கு செல்ல ஆர்வம் காட்டு குழந்தைகள். போதிய வசதி செய்து தராமல் மொளனம் காட்டும் மாவட்ட நிர்வாகம்.

மலைமாவட்டமான நீலகிரியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தோடர், இருளர், கோத்தர், காட்டு நாயக்கர், குரும்பர் மற்றும் பனியர் என 6வகையான பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வனப்பகுதியினுள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நீலகிரி மாவடத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு பெரும்பாலான திட்டங்கள் சென்றடைவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் முதுமலை யானை முகாம் அருகில் குரும்ப பாடி, மேல்பாடி, கீழ்பாடி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளது. இப்பழங்குடியின கிராமங்;களில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்களுக்காக கார்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி திறக்கபட்டது. ஆனால் அங்கன்வாடி கட்டிகொடுக்கும் படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை கட்டிதரவில்லை என கூறப்படுகிறது. குரும்பபாடியில் ஒரு சிறிய வீட்டில் அங்கன்வாடி தற்போது பெயரளவில் செயல்பட்டு வருகிறது. குரும்பபடியில் மட்டும் 20ற்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கன்வாடிக்கு வருகின்றனர். குழந்தைகளுக்கு விளையாடவும், அங்கன்வாடி ஆசிரியர் கற்றுதரவும் இடம் போதாத காரணத்தால் ஆசிரியர்கள் செய்வதியாமல் உள்ளனர். அருகில் உள்ள கார்குடி, மேல்பாடி, கீழ்பாடி பழங்குடியின கிராமத்தில் இருந்து குழந்தைகளை குரும்பபாடியில் உள்ள அங்கன்வாடிக்கு அனுப்ப ஆர்வம் காட்டினாலும், குரும்பபாடியில் உள்ள குழந்தைகளுக்கே அங்கன்வாடியில் இடம் போதவில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் குரும்பபாடி, கார்குடி, கீழ்பாடி, மேல்பாடி கிராம மக்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பமுடியாமல் அவதிபட்டு வருகின்றனர். 20ற்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் செயல்பட்டு வரும் குரும்பபாடி அங்கன்வாடிக்கு குழந்தைகள் ஆர்வத்துடன் வந்து ஆசிரியர் கற்றுகொடுக்கும் கல்விமுறை, ஒழுக்கம், விளையாட்டு ஆகியவற்றை கற்று மகிழச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.
பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அங்கன்வாடியை கட்டிகொடுத்தால் இப்பகுதியில் உள்ள பழங்குடியின குழந்தைகளின் கல்வி தரம் மேம்படுவதோடு, இவர்களின் வாழ்க்கை தரமும் உயரும். தமிழக அரசு பழங்குடியின மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகபடுத்தினாலும், பழங்குடியின மக்களின் கல்விக்காக பழங்குடியினர் வாழும் பகுதிகளில் பள்ளிகள் கட்டி முன்வர வேண்டும் என்பதே பழங்குடியின மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் இதற்கு மேலும் தமிழக அரசு பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவரும்பட்சத்தில் பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வியறிவு இன்றி அவர்களை போலவே வனப்பகுதியிலேNயு வாழ்கையை வாழந்து முடிக்கவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி : லட்சுமி - ஆசிரியை

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.