ETV Bharat / state

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்: குன்னூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

குன்னூரில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

child-labor-abolition-day
child-labor-abolition-day
author img

By

Published : Jun 12, 2021, 7:56 AM IST

நீலகிரி: குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தக் கூடாது எனத் தொழிலாளர் நலத்துறை சார்பில் உணவகங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட அளவிலான தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாளையொட்டி உறுதிமொழி எடுத்துக்கொள்வதுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குன்னூர் பஸ் நிலையம் அருகே, நீலகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சதிஷ்குமார் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உணவகங்களில் ஆய்வுமேற்கொண்டு குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தக் கூடாது எனவும், அமர்த்தினால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கபபடும் எனவும் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உணவகங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.

இதையும் படிங்க: 'இந்தியாவில் தினமும் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டும்' - திருநாவுக்கரசர் எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.