நீலகிரி மாவட்டத்திற்குள்பட்ட கூடலூர், குன்னூர், ஊட்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இதையடுத்து, குன்னூர் வந்த அவருக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் நடனமாடி வரவேற்பு வழங்கினர்.
அப்போது பேசிய அவர், "நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவ தேவைக்கு கோவை செல்ல வேண்டியுள்ளதால் நீலகிரி மாவட்டத்திலேயே தனியாருக்கு இணையான அரசு மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலையாள மக்களுக்கு 45 ஆண்டுகாலம் கோரிக்கையான பிசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரியில் வசிக்கும் படுகர் மக்கள் பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.