நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு கிராமங்களில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், வன விலங்குகள் மக்கள் நடமாடும் பகுதியில் முகாமிட்டுவருகின்றன.
இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைப் புலி உறுமும் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்ட தோட்ட உரிமையாளர் வனத் துறைக்குத் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், தேயிலை தோட்டத்தில் இரண்டு வயது சிறுத்தைப் புலி ஒன்று, கம்பியில் சிக்கி இருப்பதைக் கண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் போராடி கம்பியிலிருந்து சிறுத்தையை வனத் துறையினர் மீட்டனர். இருப்பினும் மயங்கிக் கிடந்த சிறுத்தைப் புலி இரண்டு மணி நேரம் கழித்து. தானாக எழுந்து மீண்டும் வனப் பகுதிக்குள் ஓடியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க... பொள்ளாச்சி வனப்பகுதியில் 2 புலிகள் விஷம் வைத்து கொலையா?