நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்கு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்வது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் உதகை அருகே உள்ள மேல்கவ்ஹட்டி செல்லும் சாலையில் உள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளகாத்திற்குள் நேற்று இரவு 2 கருஞ்சிறுத்தைகள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள கதிர்வீச்சு சேகரிப்பு கருவிகள் வழியாக அங்கும் இங்கும் நடந்து சென்று உணவு தேடின. சிறிது நேரத்திற்கு பின்னர் 2 கருஞ்சிறுத்தைகளும் மெதுவாக வன பகுதியை நோக்கி சென்றன. இந்த காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களால் பதிவான நிலையில் தற்போது வெளியாகி உள்ளது.
இதனால் அந்த வானியல் ஆராய்ச்சி மையத்தை சுற்றி உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளர். தற்போது அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தொடரும் மழை...கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை