நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டெருமைகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு, தேயிலை தோட்டங்களில் உலா வருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமானவர்களை தாக்கியும் உள்ளன.
![bison enters in streets](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/vlcsnap-2020-07-29-09h00m54s901_2907newsroom_1595993981_504.png)
இதனால், காட்டெருமைகளை பார்த்தாலே மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், வனப் பகுதியில் போதிய உணவு, தண்ணீர் இல்லாமல் குன்னூர் அருகே உள்ள உமரி காட்டேஜ் பகுதியில் ஒற்றை காட்டெருமை பகல் நேரத்திலேயே குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது.
![bison enters in streets](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/vlcsnap-2020-07-29-09h00m46s002_2907newsroom_1595993981_294.png)
இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் காட்டெருமையை பார்த்ததும் செல்போன்களில் செல்பி எடுத்தும், படம் பிடித்தும் வருகின்றனர். இதனால் காட்டெருமை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.