ETV Bharat / state

பிபின் ராவத் நினைவு தினம் அனுசரிப்பு

இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் உள்பட 14 பேர் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கடந்த ஆண்டு இதே நாளில் தான் உயிரிழந்தனர். விபத்து நடந்து இன்றுடன் ஓராண்டாகிறது.

பிபின் ராவத் நினைவு தினம்
பிபின் ராவத் நினைவு தினம்
author img

By

Published : Dec 8, 2022, 2:13 PM IST

நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் முப்படை ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார்.

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு எம்.ஐ. ரக ஹெலிகாப்டரில் குன்னூரை நோக்கி பயணித்து கொண்டிருந்தார். பிபின் ராவத்துடன் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர்.

பிபின் ராவத் நினைவு தினம்

குன்னூருக்கு மிக அருகில் தரையிறங்குவதற்கு 10 நிமிடம் இருக்கும் நிலையில், நஞ்சப்பசத்திரம் என்னும் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென்று விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இந்த வெடிச்சத்தம் நடுக்காட்டில் ஏற்பட்டாலும் அந்த பகுதி மக்களை குலை நடுங்க செய்தது. இதில் ஹெலிகாப்டர் முழுவதும் சுக்கு நூறாகிவிட்டது.

இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் குருசேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார், ஹவில்தார் சத்பால் ராய், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், ஸ்குட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் பிரதீப் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண்சிங் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவர் கூட இதில் தப்பவில்லை. இந்த விபத்து நிகழ்ந்ததை பார்த்ததும் நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள், தங்களது உயிரையும் பனையம் வைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர்.

போலீசாரும் ராணுவமும் வந்த பின்னரும் கூட அவர்களுடன் இணைந்து மீட்பு பணி முடியும் வரை எல்லா விதமான உதவிகளையும் கிராம மக்கள் செய்து கொடுத்தனர். ஆனாலும் ஒரு உயிரை கூட காப்பாற்ற முடியாமல் போனது அந்த கிராம மக்கள் மனதில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது.

இதற்கிடையே கிராம மக்களின் உதவிக்கு பிரதி பலனாக ராணுவம் சார்பில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தி அவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் இன்றுடன் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இதனால் விபத்து நடந்த இடத்தில் இன்று வெலிங்டன் ராணுவ கல்லூரி சார்பில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டண்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் கலந்து கொண்டார். இதேபோல் எம்.ஆர்.சி. ராணுவ கமாண்டண்ட் எஸ்.கே.யாதவ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மறுப்பு: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.