நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மலை காய்கறிகளை அதிக அளவில் சாகுபடி செய்யும் இந்த மக்கள் ஆண்டிற்கு 2 போகம் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மார்ச் மாதம் என்பதால் உதகை அருகே உள்ள அப்பக்கோடு கிராமத்தில் விதைப்பு திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 33 படுகர் இன கிராமங்களை சார்ந்த மக்கள் தங்களது பாரம்பரியமான வெண் நிற உடைகளை அணிந்து கலந்து கொண்டனர்.
பின்னர் அங்குள்ள சிவன் கோயிலில் இந்த ஆண்டு தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்கள் நல்ல விளைச்சலை தர வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், அதிக விலை கிடைக்க வேண்டியும் சிறப்பு பூஜைகளை செய்தனர்.
இதனையடுத்து திருவிழாவிற்கு வந்திருந்த படுகர் இன தலைவர்கள் வட்டமாக நின்று தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்கள். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படிங்க: பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சோதனை