நீலகிரி: அழிந்துவரும் இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்கும் விதமாக இன்று உதகையில் நடைபெற்ற பாரம்பரிய விதை திருவிழாவில் ஏராளமான ஆதிவாசி மக்கள் பங்கேற்றனர். அதில் பல்வேறு வகையான விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து விழா குழு சார்பில், பழமையான இயற்கை வேளாண்முறை நாளுக்குநாள் அழிந்து, ரசாயன சாகுபடி முறை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் நலம் பாதிக்கபட்டுவருகிறது. இந்த நிலையில் இயற்கை வேளாண்மை குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் விதமாக இந்த விழா நடைபெற்றது.
அழிந்துவரும் இயற்கை வேளாண்முறை
இந்தத் திருவிழாவில் இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட அவரை வகைகள், ராகி, சோளம், கம்பு, திணை வகைகள், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கிழங்கு வகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'Watch video: பண்ணாரி வனத்தில் தண்ணீரின்றி தவிக்கும் புள்ளிமான்கள்'