ETV Bharat / state

குடித்துவிட்டு அடுத்தவரின் வீட்டில் புகுந்த அதிமுக முன்னாள் எம்.பி.,க்கு அடி, உதை! - NILGIRI Ex MP Gopalakrishnan

கடந்த 2014-19 ஆண்டுகாலத்தில் நீலகிரி(தனி) தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன் குடிபோதையில், மற்றவரின் வீட்டில் புகுந்து அடி, உதை வாங்கிய சம்பவம் அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Ex MP Gopalakrishnan
Ex MP Gopalakrishnan
author img

By

Published : Nov 5, 2021, 8:24 PM IST

Updated : Nov 5, 2021, 8:42 PM IST

நீலகிரி: கடந்த 2014-19ஆண்டு காலத்தில் நீலகிரி(தனி) தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தவர், கோபால கிருஷ்ணன். இவர் நீலகிரி நகராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

வசமாக சிக்கிக்கொண்ட முன்னாள் எம்.பி.,

இந்நிலையில் நேற்று (நவ.04) தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அதிமுக முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் மது போதையில் முத்தாலம்மன்பேட்டைப் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது

வீடியோ எடுத்து வெளுத்துவிட்ட உரிமையாளர்

உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் முன்னாள் எம்.பி.-யை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் அவர் நிர்வாணமாக இருப்பதை அவ்வீட்டின் உரிமையாளர் கோபி வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். மேலும் குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகாரும் அளித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அதிமுக எம்.பி., கோபாலகிருஷ்ணன், தன்னை சிலர் தாக்கியதாகக் கூறி இன்று(நவ.05) குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துகொண்டார்.

இருவர் மீதும் வழக்குப்பதிவு

இதுகுறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல் துறையினர், தெரியாதவரின் வீட்டிற்குள் குடிபோதையில் புகுந்து தகாத வார்த்தைகளில் பேசிய முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் எம்.பி., மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் புகுந்து நிர்வாணமாக இருந்த சம்பவம் நீலகிரி அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பின்குறிப்பு: முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக அடி, உதை பெறும் காணொலி, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் இருந்தபோதிலும், வாசகர்களின் மனோநிலை மற்றும் ஊடக அறம் கருதி, அதை வெளியிடவில்லை.

இதையும் படிங்க: ஆபாச குறுச்செய்தி அனுப்பிய இளைஞரை அடித்து உதைத்த பெண்

Last Updated : Nov 5, 2021, 8:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.