ETV Bharat / state

நீதிபதிகளை நியமிக்கக் கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்

நீலகிரி: நீதிபதிகளை நியமிக்க கோரி கூடலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறகணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்
மறியல் போராட்டம்
author img

By

Published : Jan 11, 2020, 8:12 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் என இரு தாலுக்காக்கள் உள்ளன. 3 மாநில எல்லை பகுதியாக இருப்பதால் பல குற்ற சம்பவங்கள் இங்கு நடந்துவருகிறது. குறிப்பாக இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வன அலுவலகம், இரண்டு நகராட்சி அலுவலகம் , ஒரு கோட்டாட்சியர் அலுவலகம், இரண்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் இங்கு இயங்கி வருகிறது.

கூடலூரில் சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளது. அதேபோல், பந்தலூரில் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த அனைத்து நீதிமன்றங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டாக நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கி கிடப்பதாக கூடலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கூடலூர் நீதிமன்றங்களுக்கு என தனி நீதிபதி இல்லாத காரணத்தால், வாரத்தில் ஒருநாள் மட்டும் ஊட்டியில் இருந்து நீதிபதிகள் வந்து வழக்குகளை விசாரித்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள், காவல்துறையினர், வனத்துறையினர் என பல்வேறு தரப்பினர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

மறியல் போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த வழக்குறைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு கூடலூர் நீதிமன்றம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கூடலூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதிகள் நியமனத்திற்காக உறிய நடவடிக்கை எடுக்க வில்லை எனில் ஜனவரி 20ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தருமபுரி பாலியல் விவகாரம்: ஆசிரியர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை'

Intro:OotyBody:உதகை 10-01-20

கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள 5 நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கோரி கூடலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறகணித்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம். வரும் 20 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கூடலூர், பந்தலூர் என இரு தாலுக்காக்கள் உள்ளன. 3 மாநில எல்லை பகுதியாக இருப்பதால் பல குற்றங்கள் சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக 2 காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வன அலுவலகம், 2 நகராட்சி அலுவலகம் , ஒரு கோட்டாட்சியர் அலுவலகம், இரண்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் மக்கள் பயன் பெறும் வகையில் கூடலூரில் சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உள்ளது. அதேபோல பந்தலூரில் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றங்கள் மூலம் இப்பகுதி மக்கள் நல்ல பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் இந்த அனைத்து நீதிமன்றங்களிலும் கடந்த ஒன்றரை வருடமாக நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கி கிடப்பதாக கூடலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கூடலூர் நீதிமன்றங்களுக்கு என தனி நீதிபதி இல்லாத காரணத்தால், வாரத்தில் ஒருநாள் மட்டும் ஊட்டியில் இருந்து நீதிபதிகள் வந்து வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் என பலரும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்களில் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அவர்களை ஊட்டி வரை அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல முறை கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வழக்குறைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு கூடலூர் நீதிமன்றம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கூடலூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்னர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நீதிதிகள் நியமனம் செய்து உறிய நடவடிக்கை எடுக்க வில்லை எனில் வரும் 20 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.