உதகை: பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் உதகைக்கு சுற்றுலாப்பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் இருந்து கோத்தகிரி வழியாக உதகை சென்ற சுற்றுலாப்பயணிகளின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக திமுக எம்பி ஆ.ராசா, நீலகிரி திமுக மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். விபத்தைக் கண்ட அவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு உதவினர்.
காயம் அடைந்தவர்களை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி, உதகை அரசு மருத்துவமனைக்கு ஆ.ராசா அனுப்பி வைத்தார். பின்னர் மருத்துவர்களை தனது செல்போனில் தொடர்பு கொண்ட அவர், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த விபத்தால் கோத்தகிரி மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திராவிட மாடல் கொள்கை கற்பனையானது - ஹெச்.ராஜா விமர்சனம்!