நீலகிரி மாவட்ட உள்ளாட்சி துறையில் நடைபெற்றுவரும் டெண்டர் முறைகேடுகளை கண்டித்து உதகையில் இன்று (பிப். 12) திமுக சார்பாக நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்துகொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா பேசுகையில், " தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய மகன் வழி உறவினருக்கு டெண்டர் கொடுத்து ஊழலில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகாலம் ஆளுங்கட்சிக்கு அடிபணியாத நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னும் மூன்று மாத காலம் நேர்மையாக இருந்து பெயரை காப்பாற்ற வேண்டும்" என்றார்.
மேலும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு சொரணை இருந்தால் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தன் மீது திமுக சார்பாக தொடரப்பட்ட ஊழல் வழக்குகளை சந்திக்க தயார் என்று கூற முடியுமா எனவும் சவால் விடுத்துள்ளார்.
அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுக முன்னாள் அரசு கொறடா முபாரக். முன்னாள் கதர்வாரியத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் திராவிட மணி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.