ETV Bharat / state

புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியினை ஆய்வு செய்தார் ஆ. ராசா

உதகை எச்பிஎஃப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியினை, நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ. ராசா ஆய்வு செய்தார்.

மருத்துவக் கல்லூரி  அரசு மருத்துவக் கல்லூரி  மக்களவை உறுப்பினர்  ஆ ராசா  நீலகிரி செய்திகள்  medical college  Raja inspect medical college  A Raja  nilgris mp
ஆ ராசா
author img

By

Published : Sep 28, 2021, 9:37 PM IST

நீலகிரி: உதகை எச்பிஎஃப் பகுதியில், 45 ஏக்கர் பரப்பளவில், ரூ. 447 கோடி மதிப்பில், புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமானப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா இன்று (செப்.28) ஆய்வு செய்தார். அவருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் மனோகரி ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆண்டு துவங்கும்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராசா, “உதகையில் புதிதாக கட்டப்பட்டுவரும் மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் நடைபெறுகின்றன. மலைப்பிரதேசம் பருவநிலை காரணமாகவும் கட்டுமான பணியாளர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்கள் காரணமாகவும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை.

இந்த கல்வி ஆண்டில் 150 மாணவர்களை சேர்க்கை மாவட்ட நிர்வாகம் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தாண்டு மருத்துவக் கல்லூரி கட்டடம் கட்ட தாமதம் ஏற்பட்டால் மாற்று இடத்தில் கல்லூரி நடைபெற ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 150 மாணவர்களுடன் மருத்துவ கல்லூரி தொடங்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பாஜகவின் வலையில் சிக்காதது விடுதலைச் சிறுத்தைகள்தான்' - தொல்.திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.