நீலகிரி மாவட்டம் குன்னூர் ரேலி காம்பவுண்ட் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குழந்தைகள் வீட்டின் மொட்டை மாடியில் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் புகுந்தது. இதைக்கண்ட குழந்தைகள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதற்குள் பாம்பு வீடுகளின் கூரை மீது புகுந்தது. விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு வீட்டுக் கூரையிலிருந்த 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பைப் பிடித்தனர்.
பின்னர் மீட்கப்பட்ட சாரைப் பாம்பு பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டுச் சென்று விடப்பட்டது.
இதையும் படிங்க: 'படையப்பா' ஸ்டைலில் பாம்புடன் டிக் டாக் - கடிவாங்கி துடித்த இளைஞர்