ETV Bharat / state

தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த 320 இளம் ராணுவ வீரர்கள்! - நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாம்

நீலகிரி: வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இளம் ராணுவ வீரர்களை எல்லை பாதுகாப்புப் பணிக்கு அனுப்பிவைக்கும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணுவ வீரர்கள்
author img

By

Published : Sep 28, 2019, 1:41 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில், நூற்றாண்டுகளைக் கடந்த ராணுவப் பயிற்சி முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைப் பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பிவைக்கப்படுவார்கள்.

இம்முகாமில், 46 வாரங்கள் கடுமையான பயிற்சிபெற்ற ராணுவ வீரர்களில் 320 பேர், பயிற்சி முடித்து, நாட்டிற்குத் தன்னை அர்ப்பணிக்கும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பயிற்சிக்குச் செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான், தேசியக்கொடி மீது சத்தியம் செய்து, உப்பு உட்கொண்டு உறுதிமொழி ஏற்று, சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு பார்வையாளர்களைக் கவர்ந்தது.

320 இளம் ராணுவ வீரர்கள் தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்

ராணுவப் பயிற்சிக் கல்லூரி தலைவரான ராஜா சுப்பிரமணி பேசுகையில், “நாட்டின் எல்லை காக்கும் பணிக்குச் செல்லும் வீரர்கள், தேச நலனை கருத்தில்கொண்டு, சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

பயிற்சியில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து வீரர்களுக்குப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக, அணி வகுத்து வந்த காட்சியை கண்டு பெருமிதம் அடைந்தனர்.

Intro:குன்னூர் ராணுவ பயிற்சி முகாமில் 320 வீரர்கள் சத்திய பிரமாணம் செய்து நாம் நாட்டின் எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டனர்

குன்னுார், வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில், 320 ராணுவ வீரர்களை எல்லை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சிநடந்தது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் பல இடங்களுக்கும் பணி புரிய அனுப்பப்படுகின்றனர்.இம்முகாமில், 46 வாரங்கள் பயிற்சி பெற்ற, 320 பேர், ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி  வெலிங்டன் பேரக்ஸில் நடந்தது. பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, ராணுவ வீரர்கள், சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு .மரியாதையை ஏற்றுக் கொண்ட, ராணுவ பயிற்சி கல்லூரி தலைவரான ராஜா சுப்ரமணி தனது  உரையில் “நாட்டின் எல்லை காக்கும் பணிக்குச் செல்லும் வீரர்கள், தேச நலனை கருத்தில்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக, அணி வகுத்து வந்த காட்சியை கண்டு பெருமிதம் அடைந்தனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய, 5 வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Body:குன்னூர் ராணுவ பயிற்சி முகாமில் 320 வீரர்கள் சத்திய பிரமாணம் செய்து நாம் நாட்டின் எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டனர்

குன்னுார், வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில், 320 ராணுவ வீரர்களை எல்லை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சிநடந்தது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் பல இடங்களுக்கும் பணி புரிய அனுப்பப்படுகின்றனர்.இம்முகாமில், 46 வாரங்கள் பயிற்சி பெற்ற, 320 பேர், ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி  வெலிங்டன் பேரக்ஸில் நடந்தது. பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, ராணுவ வீரர்கள், சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு .மரியாதையை ஏற்றுக் கொண்ட, ராணுவ பயிற்சி கல்லூரி தலைவரான ராஜா சுப்ரமணி தனது  உரையில் “நாட்டின் எல்லை காக்கும் பணிக்குச் செல்லும் வீரர்கள், தேச நலனை கருத்தில்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக, அணி வகுத்து வந்த காட்சியை கண்டு பெருமிதம் அடைந்தனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய, 5 வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.