நீலகிரி மாவட்டம் கடசோலை அருகே உள்ள மலைக்கோட்டை பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்கு பணிபுரியவந்த பாலன் என்ற தொழிலாளி கீழே வயர் அறுந்துக்கிடப்பது தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கியுள்ளது.
இதைப் பார்த்த அருகிலிருந்த குமார், மணி என்ற பெண் தொழிலாளி அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒடிசாவில் 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு: அரங்கேறிய கூட்டு பாலியல் வன்முறை!