நீலகிரி மாவட்டத்தில் தட்ப வெட்ப காலநிலையை பயன்படுத்தி தொழில் அதிபர்கள் சிலர் வனப்பகுதி, நீர் நிலைகள், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நட்சத்திர சொகுசு விடுதிகள் கட்டப்பட்டு, அதன் மூலம் வருவாய் ஈடி வந்துள்ளனர்.
இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.ஆர். பஜார் மலை பகுதியில், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து பல ஏக்கர் பரப்பளவில், 11 வீடுகள் கட்டுவதற்காக வெவ்வேறு நபர்களின் பெயரில் உரிமைத்தை பெற்று கட்டடம் கட்டினர். இவற்றை தங்கும் விடுதி என பெயர் மாற்றி வணிக ரீதியில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வந்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய் மோசடி செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன் வருவாய்துறையினர் நடத்திய ஆய்வில், இந்த மோசடி உறுதியானது. இதனால் அதன் உரிமையாளருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர்கள் எவ்வித பதிலும் அளிக்காததால். பேரூராட்சி அலுவலர்கள், காவல் துறையினர், மின்சார துறையினர், வருவாய் துறையினர் இணைந்து 11 கட்டடங்களின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றை துண்டித்து, அந்த கட்டடங்களுக்கு சீல் வைத்தனர்.