ETV Bharat / state

சாவிலும் இணைபிரியாத தம்பதி! - Wife dies in shock at husband's death in Adiramapattinam

தஞ்சாவூர்: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்து சாவிலும் இணைபிரியாத தம்பதி என வாழ்ந்து காட்டியுள்ளது சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிராம்பட்டினத்தில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி இறப்
அதிராம்பட்டினத்தில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி இறப்
author img

By

Published : Jan 21, 2020, 6:29 PM IST

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முத்தழகு பிள்ளை (82), புஷ்பவள்ளி(76) தம்பதி. இவர்கள் இருவரும் திருமணம் ஆன காலம் தொட்டு, இணைபிரியாத தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்தழகு பிள்ளை உடல்நலைக் குறைவால் உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவிபுஷ்பவள்ளிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் புஷ்பவள்ளியை ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சாவிலும் இணைபிரியாத தம்பதியரின் இறுதி ஊர்வலம்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், உறவினர்கள் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இருவரது உடல்களையும் ஒன்றாக மயானத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்தனர்.

சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதி வாழ்ந்த நினைவுகளை பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:

’சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் ரஜினி வீரர்’ - எஸ்.வி. சேகர் சிறப்புப் பேட்டி

Intro:சாவிலும் இணைபிரியாத தம்பதியர்-கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியின் உயிரும் பிரிந்ததுBody:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தழகு பிள்ளை (வயது82), அவரது மனைவி புஷ்பவள்ளி(76). இவர்களுக்கு ஒரே மகன் பாலகிருஷ்ணன். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியான முத்தழகு பிள்ளை, புஷ்பவள்ளி ஆகிய இருவரும் திருமணம் ஆன காலம் தொட்டு இணைபிரியாத தம்பதிகளாக ஒருவருக்கொருவர் அன்புடனும் பாசத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். உறவினர் வீட்டுக்கு சென்றாலோ அல்லது வேறு ஏதாவது விசேஷங்களுக்கு சென்றாலும் இணைபிரியாமல் சென்று வருவார்களாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் முத்தழகு பிள்ளை உடல்நிலை குறைவால் இறந்தார். இதனால் தனது உயிருக்கு உயிரான கணவரை இழந்து விட்டோமே என்ற அதிர்ச்சியில் அவரது மனைவி புஷ்பவள்ளிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.இதையடுத்து உடனடியாக உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கணவன், மனைவி இருவரது உடலையும் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டுக்கு கொண்டு வந்து இருவரது உடல்களையும் அருகருகே வைத்து அஞ்சலி செழுத்தினர். அதன்பின்னர் இருவரது உடல்களையும் ஒன்றாக மயானத்திற்கு எடுத்து சென்று அங்கு உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர். சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதிகள் வாழ்ந்த நினைவுகளை பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.