தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான பகுதிகளில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 220க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடித் தொழிலில் பயன்பட்டு வருகின்றன.
இதன் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக வங்கக் கடலில் சூறைக் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், தஞ்சை கடல் பகுதியில் 40 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரம் வரை சூறைக் காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
எனவே தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதிலுள்ள மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.