ETV Bharat / state

'அரிசி கொடு அரிசி கொடு!' -  3 மாதங்கள் வழங்காததால் நியாயவிலைக் கடை முற்றுகை! - ரேஷன் அரிசி வழங்கவில்லை என போராட்டம்

தஞ்சை: மூன்று மாத காலமாக அரிசி வழங்கவில்லை என்று கூறி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest against ration shop
protest against ration shop
author img

By

Published : Jun 26, 2020, 8:56 AM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பரவத்தூர் மேற்கு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள், தினக்கூலி வேலைபார்த்து பிழைப்பு நடத்திவருபவர்கள். இவர்கள் கடந்த மூன்று மாத காலமாக ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் எந்தவித வருமானமும் இல்லாமல் சிரமப்பட்டுவருகின்றனர்.

இந்தக் காலகட்டத்தில் மக்கள் பசியில் வாடக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிவாரணமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மக்களுக்கு வழங்கிவருகின்றன.

இந்த நிலையில் பரவத்தூர் மேற்கு கிராமத்தில் நியாயவிலைக் கடையில் மூன்று மாத காலமாக இங்குள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் முறையாக வழங்கவில்லை என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 200-க்கு மேற்பட்ட பொதுமக்கள் நியாயவிலைக் கடையின் வாசலில் அமர்ந்து, 'அரிசி கொடு அரிசி கொடு!' என கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இவர்கள் மூன்று மாத காலமாக தாங்கள் குழந்தைகளுடன் பசியில் வாடிவருவதாகவும் அரசு உயர் அலுவலர்கள் தங்களின் நிலை கருதி உடனடியாக அரசால் வழங்கப்படும் இலவச அரிசியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மம்தா பானர்ஜியிடம் வெள்ளை அறிக்கை கோரும் பாஜக!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.