தஞ்சாவூர்: கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடைக்கு பின் வயல்களில் உள்ள வைகோல்களை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், நாச்சியார் கோவில் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஈச்சர் லாரியில் ஏற்றி சென்ற வைக்கோல் எதிர்பாராதவிதமாக நேற்றிரவு (பிப்.27) கம்மாளர் தெருவில் வரும்போது சாலையில் இருந்து மின்சார வயரில் உரசியதில் ஏற்பட்ட தீப்பொறியால் தீ பற்றி எரிந்து. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிடவே லாரி டிரைவர் சுதாரித்துக் கொண்டு லாரியை பின்னோக்கி இயக்கி அருகே இருந்த வாய்க்காலில் லாரியை பாதுகாப்பாய் இறக்கினார்.
இதனால் வாய்க்காலில் இருந்த தண்ணீரைக் கொண்டு தீயை பொதுமக்கள் அனைத்து கொண்டிருக்கும் போது, தகவலறிந்து கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் ஜேசிபி இயந்திர உதவியோடு, லாரி இருந்த வைகோல் கட்டுகளை கீழே தள்ளி சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். லாரி ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், ஈச்சர் லாரி பெரிய அளவில் சேதமின்றி தப்பியது இருப்பினும் பல லட்ச ரூபாய் வைக்கோல் முழுமையாக எரிந்து நாசமானது.
இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்றிரவு நாச்சியார்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நகைக்கடை கொள்ளை வழக்கு: துப்பு கிடைக்காமல் திணறுகிறதா போலீஸ்?