தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள், சம்பா நெல் சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நடவு மற்றும் விதைப்பு மூலம், சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் பயிர்களை பாதுகாக்க யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட நுண்ணூட்ட உரங்கள் தெளித்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் யூரியாவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
அப்படியே கிடைக்கும் ஒரு சில சங்கத்தில் விவசாயிகள் எவ்வளவு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்தாலும் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து விட்டு ஒரு மூட்டை மற்றுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கேட்டபோது யூரியா தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘யூரியா தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் துரைக்கண்ணுவும், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும் சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்றனர். உரங்களை இட்டால்தான் நல்ல மகசூலைப் பெற முடியும். எனவே உடனடியாக யூரியா வழங்க நடிவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு