தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். அவர் டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.
அவர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
அதற்காக அவர் தனது உழவு எந்திரத்தில் கறுப்புக் கொடியை கட்டி தினமும் உழவு செய்து வருகிறார். மேலும் அவர் இந்த விவசாய மசோதாக்களால் கரும்பு விவசாயிகள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாய மசோதா: குடியரசு தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!