தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் மகன் ராஜா (28) என்பவர் கள்ளச்சந்தையில் தொடர்ந்து மது விற்பனை செய்து வருகிறார். அதேபோல் பாபநாசத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் மகேஷ் (42) என்பவரும் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்தார்.
அதன்படி மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் குற்றவாளிகளான ராஜா, மகேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது