ETV Bharat / state

62 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த 2 உலோக சிலைகள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

author img

By

Published : Oct 10, 2019, 8:00 PM IST

தஞ்சாவூர்: அருங்காட்சியகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு உலோக சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் காவல் துறையினர் இன்று ஒப்படைத்தனர்.

statue

தஞ்சை பெரிய கோயிலில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழன் சிலை மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சிலைகள் மாயமானதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலைவைத்து அப்போதைய ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர், காணாமல் போன சிலைகளில் இரண்டு சிலைகள் தஞ்சாவூர் அரண்மனை கலைக்கூடத்தில் இருப்பதாகக் கல்வெட்டில் ஆராயப்பட்டு கடந்த 6ஆம் தேதி 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு செய்தனர்.

நீதிமன்றத்தில் சிலை ஒப்படைப்பு

இந்த ஆய்வில் தஞ்சை அழகர் என்கிற சிவன் சிலை, திரிபுராந்தகர் ஆகிய இரண்டு சிலைகளையும் மீட்ட காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்திற்கு இன்று எடுத்துச் சென்று ஒப்படைத்தனர். இந்த இரண்டு சிலைகளும் 62 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 37 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வந்த நடராஜர் சிலை

Intro:
தஞ்சாவூர் அக் 10

அருங்காட்சியத்தில் இருந்த இரண்டு உலோக சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்தனர்Body:

தஞ்சை அருங்காட்சியத்தில் இருந்து சிலைகள் கடத்தல் தடுப்பு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட
தஞ்சை பெரிய கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீதட்சிணாமூர்த்தி மற்றும் திரிபுராந்தகர் ஆகிய இரண்டு உலோக சிலைகளை சிலைகள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வரும்
காவல்துறையினர் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்தனர்
தஞ்சை பெரிய கோவிலில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழன் சிலை மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலை உள்பட 50க்கும் மேற்பட்ட சிலைகள் மாயமான தாகவும் கிடைத்த தகவலை வைத்து அப்போது ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் ராஜராஜ சோழன் சிலை குஜராத் மியூசியத்தில் இருந்து மீட்டு தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்பட்டது இந்த சிலை மாயமான வழக்கு தற்போது வரை நடைபெற்று வருவதால் தஞ்சை பெரிய கோவிலில் மாயமான சிலைகளில் இரண்டு சிலைகள் தஞ்சாவூர் அரண்மனை கலைக்கூடத்தில் இருப்பதாக கல்வெட்டில் ஆராயப்பட்டு கடந்த 6ம் தேதி தஞ்சாவூர் அரண்மனை கலைக்கூடத்தில் சிலை தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு செய்ததில் தஞ்சை அழகர் என்கிற சிவன் சிலையும் திரிபுராந்தகர் என்கிற இரண்டு சிலைகளை மீட்டு கும்பகோணம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது அதனை இன்று ஒப்படைக்கபட்டது
இந்த இரண்டு சிலைகளும் 62 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக விசாரணையில் தெரிய வருவதாகும். Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.