ETV Bharat / state

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; கும்பகோணத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கம்! - Transport Strike

Thanjavur bus running: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கும்பகோணத்தில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது என கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Thanjavur bus Strike
போக்குவரத்து தொழிசங்கம் வேலைநிறுத்தம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 10:26 AM IST

Updated : Jan 9, 2024, 11:38 AM IST

தஞ்சாவூர்: போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி இன்று (ஜன.9) வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் போன்ற ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

தமிழக அரசு சார்பில், போக்குவரத்து கழகங்களுடன், ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியுற்ற நிலையில், நேற்று (ஜன.8) 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

அந்த வகையில், கும்பகோணம் போக்குவரத்து மண்டலத்தில், தஞ்சை மாவட்டத்தில் 444 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில், இன்று காலை 6.30 மணி நிலவரப்படி, 50 சதவீத புறநகர் மற்றும் நகர் பேருந்துகள் மட்டும் இயக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், கும்பகோணம் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் இயங்கும் 444 பேருந்துகளையும் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து துறையில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களைக் கொண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கும்பகோணம் மண்டல பொது மேலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும், இரவு பணியில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணி முடிந்து இறங்கி, இரண்டாவது சிப்ட் பணியாளர்கள் பணிக்கு வருவது குறித்து, வேலை நிறுத்த போராட்டத்தை முழுமையாக அறிய முடியும் என்றார்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை கடலூர் பணிமனையில் இருந்து 20 சதவீத பேருந்துகள் பேருந்துகள் மட்டுமே வெளியே சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், மயிலாடுதுறையில் 83 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், இன்று தொழிலாளர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை தொடங்கினாலும், பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்து இயக்குவதில் எந்த தடங்கலும் ஏற்படாது, சிறப்பு பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் இயக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் அழைத்தால், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் தொழிற்சங்கம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் மாநகர் பேருந்துகள் முழுமையாக இயக்கம் - எம்டிசி மேலாண் இயக்குநர் தகவல்!

Last Updated : Jan 9, 2024, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.